Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்க்க கூடுதல் முயற்சி தேவை –மக்ரோன்

In ஐரோப்பா
Updated: 07:09 GMT, May 10, 2018 | Published: 07:09 GMT, May 10, 2018 |
0 Comments
1065
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினையைத் தீர்ப்பதற்கு கூடுதலான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டுமென, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் புதிய பார்வை எனும் தொனிப்பொருளில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் சார்லேமெய்ன் (Charlemagne) விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். ஜேர்மனியின் ஆஃகன் (Aachen) நகரில் நேற்று (புதன்கிழமை) இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மத்தியில் அவர் உரையாற்றியபோது, ‘ பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்சினை பாரிய பிரச்சினையாகக் காணப்படுவதுடன், மேற்படி நாடுகளில் வேலைவாய்ப்பு பிரச்சினையில் 30 முதல் 50 சதவீத அதிகரிப்புக் காணப்படுகின்றது. இதனால், இளைஞர்கள் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், வேலைவாய்ப்பின்மையினால் அவர்கள் ஆபத்தை எதிர்நோக்கவும் வழிவகுக்கும்’ என்றார்.

எனவே, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் காணப்படும் வேலைவாய்ப்பு பிரச்சினையைத் தீர்க்க சீர்திருத்த நடவடிக்கை அவசியமெனவும்,  அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg