Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடியர்களுக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லை: ஆய்வில் தகவல்

In கனடா
Updated: 09:13 GMT, May 10, 2018 | Published: 09:13 GMT, May 10, 2018 |
0 Comments
1041
This post was written by : Anojkiyan

கனேடியர்களில் பெரும்பாலானவர்கள் திருமணம் செய்துக் கொள்வதில் ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பதாக, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அங்கஸ் ரெய்ட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலேயே குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

திருமணம் குறித்து கனடியர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதற்காக 1,520 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இருவர் இணைந்து வாழ்வதற்கு திருமணம் என்னும் ஒரு விடயம் தேவை இல்லை என்று பாதிக்கும் மேலானோர் தெரிவித்தனர்.

அமெரிக்கா மற்றும் இதர வளர்ந்த நாடுகளில் காணப்படுவதைப் போலவே திருமணத்தைவிடவும் கல்வியும், வேலையுமே முக்கியமானவை என்னும் ஒரு மன நிலைமை மாறி வருவதை இந்த போக்கு காட்டுகிறது குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg