Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசர் ஹரி மண நாளன்று வின்ஸ்டர் கோட்டைக்கு மேலாக விமானங்கள் பறக்கத் தடை

In
Updated: 11:38 GMT, May 10, 2018 | Published: 11:38 GMT, May 10, 2018 |
0 Comments
1347
This post was written by : Suganthini

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த நடிகையான மேகன் மாக்கிலின் திருமண நாளன்று, வின்ஸ்டர் கோட்டையின் மேலாக விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானாவின் இளைய புதல்வரான இளவரசர் ஹரிக்கும் மேகன் மாக்கிலுக்குமான திருமண வைபவம், பிரித்தானிய அரச குடும்பத்தின் மிகவும் பிரசித்தமானதும் அடையாளச் சின்னங்களில் ஒன்றாகியதுமான 1528ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட சென். ஜோர்ஜ் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 19ஆம் திகதி பிரித்தானிய நேரப்படி நண்பகல் தேவாலயத்தில் கைப்பிடிக்கும் இளவரசர் ஹரி –மேகன் மாக்கில் தம்பதியினர், ஒரு மணிக்கு வின்ஸ்டர்கோட்டை வழியாக குதிரை வண்டியில் ஊர்வலமாக வலம் வரவுள்ளனர்.  இந்நிலையில், அன்றையதினம் வின்ஸ்டர்கோட்டைக்கு மேலாக விமானங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இவர்களின் ஊர்வலத்தைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி –மேகன் மாக்கில் தம்பதியினர் சென். ஜோர்ஜ் மண்டபத்துக்கு விருந்தினர்களின் வரவேற்புக்காகத் திரும்புவர்.

அத்துடன், அன்றையதினம் மாலை இளவரசர் ஹரியின் தந்தை இளவரசர் சார்ள்ஸின் ஏற்பாட்டில் அரச குடும்ப உறுப்பினர்களுக்கும் நெருங்கிய நண்பர்களுக்கும் வரவேற்பு நிகழ்வு விருந்துபசாரம் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, தங்களின் திருமண வைபவத்தை பொதுமக்களும் தமது நிகழ்வாகக் கருதி உணரும் வகையில் ஏற்பாடுகளைச் செய்யவுள்ளதாக, இளவரசர் ஹரி –மேகன் மாக்கில் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg