Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கெஜ்ரிவாலின் நெருங்கிய உறவினர் கைது!

In இந்தியா
Updated: 05:11 GMT, May 11, 2018 | Published: 05:11 GMT, May 11, 2018 |
0 Comments
1067
This post was written by : Ravivarman

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நெருங்கிய உறவினரை இலஞ்ச ஒழிப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

டெல்லி பிதாம்புரா பகுதியில் கெஜ்ரிவாலின் மைத்துனரின் மகன் வினய் பன்சாலை பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) காலை கைது செய்தனர்.

பொதுப் பணித்துறையில் இடம்பெற்ற ஊழல் தொடர்பாகவே இவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்புப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் வீதிகள் மற்றும் பாதாள சாக்கடைகள் அமைக்கும் பணி ரேணு கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாகவும், முதலமைச்சர் கெஜ்ரிவாலும் பொதுப்பணித்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி ஒப்பந்தங்கள் வழங்கியதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

ரேணு கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரர்களில் சுரேந்தர் பன்சாலும் ஒருவர். இவர் முதலமைச்சர் கெஜ்ரிவாலின் மைத்துனர். சுரேந்தர் பன்சாலின் மகன் வினய் பன்சால். இவருக்கும் ரேணு கட்டுமான நிறுவனத்தில் பங்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg