Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கர்நாடகத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும்: அமித்ஷா

In இந்தியா
Updated: 05:58 GMT, May 11, 2018 | Published: 05:58 GMT, May 11, 2018 |
0 Comments
1053
This post was written by : Ravivarman

நடைபெறவுள்ள கர்நாடகத் தேர்தலில் பாரதிய ஜனதா 130 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூர் விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘கர்நாடகாவில் 224 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அவற்றில் குறைந்தது 130 இடங்களை பாரதிய ஜனதா கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன். கர்நாடகத்தின் முதலமைச்சராக எடியூரப்பா பதவி ஏற்பார்.

சட்டசபைத் தேர்தலில் முறைகேடான வழியில் வெற்றி பெற காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான போலி வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதுவே இதற்கு சாட்சி. ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் என்று கருதியவர்களுக்கு இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது’ என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)