Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இல்லை: உச்ச நீதிமன்றம்!

In இந்தியா
Updated: 07:55 GMT, May 11, 2018 | Published: 07:55 GMT, May 11, 2018 |
0 Comments
1065
This post was written by : Ravivarman

ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பில் விசாரணை செய்யக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்துள்ளது.

நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இயக்குநர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோதே மனுதாரரின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

டுபாய் பொலிஸார் நடத்திய விசாரணையில் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகப்படும் விடயங்கள் எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியே குறித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பிரபல நடிகை ஸ்ரீதேவி கடந்த பெப்ரவரி மாதம் நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக டுபாய் சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த விடுதி அறையின் குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg