Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கர்நாடகாவில் கடும் பாதுகாப்பு: கடத்தப்பட்ட பணம் பறிமுதல்!

In இந்தியா
Updated: 08:45 GMT, May 11, 2018 | Published: 08:45 GMT, May 11, 2018 |
0 Comments
1040
This post was written by : Ravivarman

கர்நாடகாவில் முறையான ஆவணங்கள் இன்றிக் கொண்டு செல்லப்பட்ட 2.17 கோடி ரூபாய் பணம் இன்று (வெள்ளிக்கிழமை) பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

கர்நாடகாவில் நாளை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையின் போதே காரில் சட்டவிரோதமாகக் கொண்டு செல்லப்பட்ட பெருமளவான பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

முறையான ஆவணம் இன்றிப் பணத்தைக் கொண்டு சென்றதாக கூறி அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்ததுடன், இது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக எடுத்து செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், தொடர்ந்தும் விசாரணை நடைபெறுவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்துள்ளதுடன், நாளை சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று அனைத்து பகுதிகளிலும் வாக்குச்சீட்டு வழங்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இதன்போது வாக்காளர்களுக்குப் பணம் வழங்கப்படலாம் என்ற தகவல் பரவியதால், பொலிஸாரும், தேர்தல் பறக்கும் படையினரும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)