Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப உதவுவோம் -பொம்பியோ

In
Updated: 03:38 GMT, May 12, 2018 | Published: 03:38 GMT, May 12, 2018 |
0 Comments
1055
This post was written by : Suganthini

வடகொரியா அதன் அணுவாயுதச் செயற்பாடுகளைக் கைவிடும் பட்சத்தில், அந்நாட்டின் பொருளாதாரத்தைக் மீளக்கட்டியெழுப்புவதற்கு தாம் உதவவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் அணுச் சோதனைகளினால் முரண்பட்ட நிலையில், அவதூறான சொற்பிரயோகங்களையும் அச்சுறுத்தல்களையும் விடுத்துவந்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், எதிர்பாராத வகையில் சமாதானப் பேச்சைத் தொடர கடந்த ஏப்ரலில் இணக்கம் தெரிவித்தனர். இதனையடுத்து, இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, சிங்கப்பூரில் எதிர்வரும் ஜுன் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையிலேயே, அமெரிக்காவின் இந்த  அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்துத் தெரிவித்த அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, ‘எமது நட்பு நாடாகிய தென்கொரியாவுடன் நாம் சமநிலையை அடையும் வகையில், வடகொரியாவுடன் ஒத்துழைத்து நடக்க நாம் தயாராகவுள்ளோம். இந்நிலையில், வடகொரியாவும் அதன் அணுவாயுதச் செயற்பாடுகளைக் கைவிட ஒத்துழைத்தால், அந்நாட்டின் பொருளாதாரத்தைக் மீளக்கட்டியெழுப்புவதற்கு நாம் உதவுவோம்’ என்றார்.

மேலும், தனது நாட்டின் நலன் கருதி வடகொரிய ஜனாதிபதி கிம் சரியான பாதையைத் தெரிவுசெய்தால், வடகொரிய மக்களுக்கு சமாதானம் கிட்டுமென்பதுடன், வளமான எதிர்காலமும் அந்நாட்டு மக்களுக்கு ஏற்படுமெனவும், அவர் கூறியுள்ளார்.

எனவே அணுவாயுதச் செயற்பாடுகளைக் கைவிட வடகொரியா தைரியத்துடன் முன்வர வேண்டுமெனவும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

1953ஆம் ஆண்டில் கொரியப்போர் முடிவுக்கு வந்த பின்னர், வடகொரியாவின் பொருளாதார நிலைமை மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ளதுடன், அந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் வறுமையில் பரிதவிக்கின்றனர். எனினும், அந்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வடகொரிய ஜனாதிபதி கிம் முன்னுரிமை அளித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவின் நட்பு நாடான தென்கொரியா முதலாளித்துவ தத்துவத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், ஆசியாவின் மிகச் செல்வச் செழிப்புமிக்க நாடுகளில் ஒன்றாக தென்கொரியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)