Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசர் ஹரியின் மண நாளன்று வங்கி விடுமுறை இல்லை

In
Updated: 06:02 GMT, May 12, 2018 | Published: 05:18 GMT, May 12, 2018 |
0 Comments
1086
This post was written by : Suganthini

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மூத்த சகோதரரான இளவரசர் வில்லியமின் திருமண வைபவத்தின்போது விடுமுறைதினம் வழங்கப்பட்டபோதும், ஹரியின் திருமண வைபவத்தின்போது, வங்கி விடுமுறைதினம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லையென, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் இரண்டாம் எலிஸபெத் மகாராணியின் பேரப்பிள்ளையான இளவரசர் ஹரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகையான மேகன் மாக்கிலுக்கும் எதிர்வரும் 19ஆம் திகதி வின்ஸ்டர் கோட்டையிலுள்ள சென். ஜோர்ஜ் தேவாலயத்தில திருமணம் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இவர்களின் திருமணத்தைக் கண்டுகளிப்பதற்காக உலக மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துள்ள வேளையில், ஹரி –மேகன் மாக்கிலின் திருமணத்துக்கு இன்னும் 8 நாட்களேயுள்ளன.

திருமண ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்று வரும்போதும், இவர்களின் திருமண நாளான எதிர்வரும் 19ஆம் திகதி புதிய வங்கி விடுமுறை தினமாக இதுவரையில்  அறிவிக்கப்படவில்லையெனவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.

இளவரசர் ஹரியின் மூத்த சகோதரரான இளவரசர் வில்லியம் -கேட் மிடில்ட்டனுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதி திருமணம் நடைபெற்றபோதும், ஹரியின் பெற்றோரான இளவரசர் சார்ள்ஸ் -இளவரசி டயானாவுக்கு 1981ஆம் ஆண்டு ஜுலை 29ஆம் திகதி திருமணம் நடைபெற்போதும், இவர்களின் திருமண வைபவங்களைக் பொதுமக்களும் கொண்டாடும் வகையில் விடுமுறைதினங்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், பிரித்தானியாவின் இரண்டாம் எலிஸபெத் மகாராணியின் புதல்வியான இளவரசி ஆன் –மார்க் பிலிப்பின் திருமணம் 1973ஆம் ஆண்டு நடைபெற்றபோதும் விடுமுறைதினம் வழங்கப்பட்டது.

ஆனால், ஹரியின் திருமணத்தின்போது புதிய வங்கி விடுமுறைதினம் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, மகாராணியின் ஏனைய இரு புதல்வர்களான இளவரசர்களான அன்ட்ரூ மற்றும் எட்வார்ட்டின் திருமணத்தின்போதும், விடுமுறைதினம் வழங்கப்படவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)