Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொருளாதார முன்னேற்றத்தைக் காண முடியுமென ஜேர்மன் நிறுவனங்கள் நம்பிக்கை வெளியீடு

In ஐரோப்பா
Updated: 09:02 GMT, May 12, 2018 | Published: 09:02 GMT, May 12, 2018 |
0 Comments
1026
This post was written by : Suganthini

வெளிநாட்டுச் சந்தைகளில் பொருளாதார முன்னேற்றத்தைக் காண முடியுமென்று, ஜேர்மனிலுள்ள பெரும்பாலான கம்பனிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

கடந்த மார்ச் முதல் ஏப்ரல்வரையான காலப்பகுதியில் வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அலுவலகம் நடத்திய ஆய்விலேயே, இந்த விடயம் தொடர்பாகத் தெரியவந்துள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது.

இதன்போது, 5 ஆயிரத்து 100 கம்பனிகளில் மேற்படி அலுவலகம் ஆய்வு நடத்தியது.

எதிர்வரும் 12 மாதங்களில் வெளிநாட்டுச் சந்தைகளில் சிறந்த பொருளாதார முன்னேற்றத்தை எட்ட முடியுமென்று 40 சதவீதமான கம்பனிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

வர்த்தக நடவடிக்கைகளில் சிக்கல் மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை காணப்படும்போதிலும், வெளிநாட்டுச் சந்தைகளில் தமது பொருளாதார நடவடிக்கைகளை முன்னேற்ற முடியுமெனவும், அக்கம்பனிகள் கூறியுள்ளன.

இதேவேளை 10 சதவீதமான கம்பனிகள், பொருளாதாரச் சீரழிவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளன.

அத்துடன் 50 சதவீதமான கம்பனிகள், இந்த நிலைமையில் எந்தவித மாற்றமுமில்லையெனக் கூறியுள்ளன.

மேலும், வர்த்தக நடவடிக்கைகளில் கம்பனிகள் அதிகளவான தடைகளை எதிர்கொள்வதுடன், அரசியல் நெருக்கடி மற்றும் பிரெக்சிற்றினால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை இத்தடைக்கு காரணங்களாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)