Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குயீன் எலிசபெத் நெடுஞ்சாலையில் வாகன விபத்து: ஒருவர் படுகாயம்

In கனடா
Updated: 09:23 GMT, May 12, 2018 | Published: 09:23 GMT, May 12, 2018 |
0 Comments
1034
This post was written by : Anojkiyan

குயீன் எலிசபெத் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுகாயமடைந்தவர் உயிராபத்தான நிலையில், ஹமில்ட்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வாகன விபத்தில் காயமடைந்தவர் ஆண் என தெரிவித்துள்ள பொலிஸார், அவர் குறித்த மேலதிக தகவல் எதனையும் வெளியிடவில்லை.

விபத்துக்கான காரணம் தொடர்பில் விபரங்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குயீன் எலிசபெத் நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிய வழித்தடத்தில், ஓக்வைல் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg