Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

செவ்வாய்க் கிரகத்திற்கு ஹெலிகொப்டர் பயணம்: நாசாவின் திட்டம் 

In
Updated: 10:27 GMT, May 12, 2018 | Published: 10:27 GMT, May 12, 2018 |
0 Comments
1239
This post was written by : Johnson paiva

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தமது முதல் கனரக விமான சோதனையாக சிறிய ஹெலிகொப்டர் ஒன்றினைச் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தமது வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

நாசாவின் முதற்கட்ட விமான சோதனையான குறித்த அந்த ஹெலிகொப்டரை செவ்வாய்க்கு அனுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளதாக நாசா தமது வலைத்தளத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க் கிரகத்தின் வளிமண்டலமானது பூமியை விட 100 மடங்கு மெல்லியதாகக் காணப்படுகின்றமையினால் இந்த ஹெலிகொப்டர் அங்கு பறப்பதற்கு உகந்ததாக சிறிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த ஹெலிகொப்டரானது 1.8 கிலோகிராம் எடையிலேயே உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதனை வடிவமைக்க 4 வருடங்கள் தேவைப்பட்டதாகவும் நாசா தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த ஹெலிகொப்டருக்கு விமானி தேவையில்லை எனவும் நமது எதிர்கால அறிவியல் கண்டுபிடிப்புக்கள் மற்றும் செவ்வாய்க்கிரக ஆய்வுகளை உறுதி செய்ய இந்த ஹெலிகொப்டர் உதவுமெனவும் நாசா தெரிவித்துள்ளது.

மேலும் 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 சோதனை விமானங்களை தொடர்ச்சியாக செவ்வாய்க்கிரகத்திற்கு அனுப்பவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)