Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

200 ஆண்டுகளில் காணாத வெள்ளப் பெருக்கு: 2,700 குடியிருப்பாளர்களை வெளியேற உத்தரவு

In கனடா
Updated: 09:39 GMT, May 12, 2018 | Published: 09:39 GMT, May 12, 2018 |
0 Comments
1217
This post was written by : Anojkiyan

பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்கு பிராந்தியங்களில், கடந்த 200 ஆண்டுகளில் காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சுமார் 2,700 குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 12 மணித்தியாளங்களாக பெய்த கடும் மழையால், அங்குள்ள சில இடங்களில் மழைவீழ்ச்சியின் அளவு 50 மில்லிமீட்டர் வரையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கடந்த 24 மணி நேரத்தில் அங்குள்ள ஆறுகள் ஏரிகளில் நீர் மட்டம் குறிப்பிட்ட அளவு அதிகரித்துள்ளதுடன், இந்த நீர்மட்டம் மேலும் அதிகரித்து ஆபத்தான நிலையை எட்டக்கூடும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறித்த பிராந்தியத்தில் ஏற்பட்ட பருவநிலைக்கு மாறான திடீர் வெப்ப அதிகரிப்பு, பலத்த மழை மற்றும் பெருமளவு பனிக் கட்டிகள் உருகுதல் ஆகியவற்றால், வெள்ளப் பெருக்கு அபாயம் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)