Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவுடன் சிறந்த உறவை பேணுகின்றோம் -துருக்கிய அமைச்சர்

In
Updated: 10:58 GMT, May 12, 2018 | Published: 10:58 GMT, May 12, 2018 |
0 Comments
1027
This post was written by : Suganthini

துருக்கிக்கும் பிரித்தானி;யாவுக்குமிடையில் சிறந்த உறவு காணப்படுவதாக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான துருக்கிய அமைச்சர் ஒமர் செலிக் (Omer Celik ) தெரிவித்துள்ளார்.

லண்டனுக்கு விஜயம் செய்துள்ள துருக்கிய அமைச்சர், பிரித்தானிய உயர்மட்ட அதிகாரிகளை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த பின்னர், கருத்துத் தெரிவித்தபோதே, மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘கடந்த 2016ஆம் ஆண்டில் துருக்கியில் முன்னெடுக்கப்படவிருந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியின் பின்னர், துருக்கியை பிரித்தானியா சரியான முறையில் புரிந்துகொண்டுள்ளது. இதனையடுத்து, துருக்கிக்கும் பிரித்தானியாவுக்குமிடையில் சிறந்த உறவு பேணப்பட்டு வருகின்றது’ என்றார்.

துருக்கியை சரியாக புரிந்துகொண்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்றாகும். ஆகவே, பிரித்தானியாவுடன் சிறந்த உறவை தாம் பேணி வருகின்றோமென்பதில் எந்தவித சந்தேகமுமில்லையெனவும், அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் துருக்கிய ஜனாதிபதிக்கு பிரித்தானியா தமது ஆதரவை வழங்கி வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

துருக்கிய மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கலந்துகொள்ளும் Tatlı Dil Forum எனும் மாநாடு லண்டனில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக துருக்கிய அமைச்சர் லண்டனுக்கு விஜயம் செய்துள்ளார். இதேவேளை, இம்மாநாட்டில் துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகனும் கலந்துகொள்ளும் நிலையில், அவர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) லண்டனுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)