Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாளின் வருடாந்த மகோற்சவம்

In
Updated: 11:38 GMT, May 12, 2018 | Published: 11:38 GMT, May 12, 2018 |
0 Comments
1085
This post was written by : Kemasiya

வரலாற்று பிரசித்தி பெற்ற சுதுமலை ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

யாழ்.மானிப்பாய் – சுதுமலை நகரில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் மகோற்சவம் 18 நாட்கள் இடம்பெறவுள்ளது.

இன்று கொடியேற்றத்துடன்ஆரம்பமாகிய உற்சவமானது, 16 நாட்கள் இடம்பெற்று 17ஆவது நாள் ரத உற்சவமும் 18ஆவது நாள் தீர்த்த உற்சவமும் இடம்பெறும்.

இங்கு தேர் மற்றும் தீர்த்த உற்சவத்தின் சிறப்பம்சங்கள் என்னவெனில், தேர் திருவிழா அன்று ஊர் மக்கள் அனைவரும் அம்பாளுக்கு மடை படைப்பார்கள்.

குறித்த மடையை செய்வதற்காக அவ்வூரை சேர்ந்த புலம்பெயர் மக்கள் மற்றும் ஊர் விட்டு ஊர் மாறியுள்ளவர்கள் கூட ஆலயத்தை புடை சுழ்ந்து அம்பாளுக்கு மடை படைப்பார்கள்.

அதேபோன்று தீர்த்த உற்சவமானது ஒவ்வொரு வைகாசி விசாக பௌர்ணமியில் இடம்பெறுவது சிறப்பம்சமாகும்.

மதுரையை தீக்கரையாக்கிய கண்ணகி ஐந்து தலை நாகமாக தன்னை உருமாற்றிக்கொண்டு தெற்கு நோக்கி சென்றால் என்றும், அதில் இலங்கையில் நாயினாதீவிற்கு முதலில் சென்றதாகவும், பின்னர் சுருவில் வட்டுக்கோட்டை, நவாலி, களுவோடை சுதுமலை, சீரணி, அங்கணாமைக்கடவை அளவட்டி, ஆகிய இடங்களுக்கு சென்று இறுதியாக வற்றாப்பளையை சென்றடைந்தால் என வரலாறு கூறுகிறது.

இந்நிலையில் சுதுமலை வந்த கண்ணகிக்கு குடில் அமைத்து அவ்வூர் மக்கள் வழிபட்டு வந்தனர்.

அது காலப்போக்கில் பல மாற்றங்களின் பின்னர் இன்று சுதுமலை புவனேஸ்வரி அம்மன் என்றும் வற்றாப்பளை அம்மன் என்றும் இரு வேறு கோபுரத்தின் கீழ் குறித்த ஆலயம் அமையப்பெற்றுள்ளது.

அத்தோடு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இந்தியா -இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக பல லட்சம் தமிழர்கள், இந்திய ராணுவத் தளபதிகள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில், இவ்வாலயத்தின் தற்போதைய தேர் தரிப்பிடத்தில் வைத்தே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)