Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முன்னணி வீரர்களை வீழ்த்தி முதல் முறையாக இறுதி போட்டியில் டொமினிக் தீம்

In டெனிஸ்
Updated: 03:06 GMT, May 13, 2018 | Published: 03:06 GMT, May 13, 2018 |
0 Comments
1041
This post was written by : Jeyachandran Vithushan

ஸ்பெயின் நாட்டில் நடந்து வரும் மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரையிறுதி போட்டிகள் நேற்று (சனிக்கிழமை) விறுவிறுப்பாக இடம்பெற்றது.

இந்த போட்டியில் தரப்படுத்தலில் 7 ஆவது இடத்தில் உள்ள வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் ஆகியோர் மோதினர்.

ஆரம்பத்தில் இருந்து சிறப்பாக ஆடிய டொமினிக் தீம் 6-4 என்ற கணக்கில் முதல் சுற்றை கைப்பற்றினார். தொடர்ந்து பொறுப்புடன் ஆடிய டொமினிக் தீம் 6-2 என்ற கணக்கில் இரண்டாவது சுற்றையும் கைப்பற்றி அசத்தினார்.

இதையடுத்து, 6-4, 6-2 என்ற கணக்கில் கெவின் ஆண்டர்சனை வீழ்த்திய டொமினிக் தீம் முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்தார். இவர் காலிறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலை தோற்கடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg