Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸில் கத்திக்குத்துச் சம்பவம்: இருவர் உயிரிழப்பு

In ஐரோப்பா
Updated: 03:14 GMT, May 13, 2018 | Published: 03:14 GMT, May 13, 2018 |
0 Comments
1075
This post was written by : Suganthini

பிரான்ஸில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், நால்வர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கத்திக்குத்தை நடத்திய நபர் ஒபெரா மாவட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.

தலைநகர் பரிஸில் கேளிக்கை நிகழ்வு மற்றும் இரவுவேளை வாழ்க்கைக்கு பெயர்போன இடத்தில் நேற்று (சனிக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இந்த இடத்தினுள் திடீரென நுழைந்த நபர் கத்திக்குத்தை நடத்தியபோது, தாக்குதல்தாரியை பொலிஸார் பிடிக்க முற்பட்டனர். இதன்போது, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் மேற்படி நபர் உயிரிழந்ததாகவும் அவர் உயிரிழக்கும்போது அல்லாஹ் அக்பர் என்று சத்தமிட்டதாகவும், சம்பவத்தைக் கண்டவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ்.அமைப்பினர், தமது படைவீரர்களில் ஒருவரே கத்திக்குத்தை நடத்தியதாகவும் கூறியுள்ளனர்.

இதேவேளை, இந்தச் சம்பவத்துக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)