Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்னில் விமான விபத்து: மூவர் உயிரிழப்பு

In
Updated: 04:16 GMT, May 13, 2018 | Published: 04:16 GMT, May 13, 2018 |
0 Comments
1045
This post was written by : Suganthini

ஸ்பெய்னில் சிறியரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில், மூவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போர்த்துக்கல்லின் கரையோர நகரமான கஸ்காய்ஸ் (Cascais நகரிலிருந்து நேற்று (சனிக்கிழமை) புறப்பட்ட இவ்விமானம், வடமேற்கு ஸ்பெய்னிலுள்ள ரொய்ஸ் (Reus) சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்டது.  இதன்போது, ஸ்பெய்னின் கற்றலோனியாப் பிராந்தியத்தில் குறித்த விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக இதுவரையில் அடையாளம் காணப்படவில்லையெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விபத்துக் காரணமாக ரொய்ஸ் விமான நிலையப் போக்குவரத்தில் பாதிப்பேற்படவில்லையெனக் கூறியுள்ள பொலிஸார், இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)