Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுமன்னிப்பு காலம் முடிந்தும் பொதுமக்களிடம் துப்பாக்கிகள்

In கனடா
Updated: 05:44 GMT, May 13, 2018 | Published: 05:44 GMT, May 13, 2018 |
0 Comments
1033
This post was written by : Jeyachandran Vithushan

சட்டவிரோத துப்பாக்கிகளை கையளிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த ஒரு மாத கால பொதுமன்னிப்பு முடிவந்த நிலையிலும் பொதுமக்கள் தொடர்ந்தும் துப்பாக்கிகளை வழங்கி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

குறித்த கலப்பகுதியானது உத்தியோகப்பூர்வமாக முடிவடைந்தாலும் கூட மக்கள் கையளிக்கப்படும் துப்பாக்கிகளை தாம் பெற்று வருவதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்வாறு துப்பாக்கிகளை வைத்திருப்போர், அவற்றை காவல் நிலையங்களுக்கு எடுத்து வர வேண்டாம் எனவும், தமக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து அது குறித்து தெரியப்படுத்தினால், அதிகாரிகள் அவற்றை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் அறிவித்துள்ளது.

அதேவேளை கடந்த ஒரு மாத காலமாக முன்னெடுக்கப்படட பொது மன்னிப்பின் போது, 2 ஆயிரத்திற்கும் அதிகமான துப்பாக்கிகள் பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றினை தவிர இந்த பொது மன்னிப்பினை பயன்படுத்தி 1,503 துப்பாக்கிகளை, அவற்றினை வைத்திருந்தோர் தாமாகவே முன்வந்து கையளித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)