Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொழிலாளர்களின் உரிமையை வலியுறுத்தி லண்டனில் பேரணி

In
Updated: 06:39 GMT, May 13, 2018 | Published: 06:39 GMT, May 13, 2018 |
0 Comments
1039
This post was written by : Suganthini

தொழிலாளர்களின் உரிமை மற்றும் அதிகரித்த சம்பளக் கொடுப்பனவை வழங்கக்கோரி, லண்டனில் பாரிய பேரணியொன்று நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.

வர்த்தக ஒன்றியக் காங்கிரஸின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேரணியில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கானோர் தொழிலாளர்களின் உரிமை, அதிகரித்த சம்பளக் கொடுப்பனவு, தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

அத்துடன், பொது நிர்வாகச் சேவைகள் மற்றும் தொழிலாளர்களின் நலனைக் கவனத்திற்கொண்டு புதிய உடன்படிக்கையொன்றை ஏற்படுத்துமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பாக கருத்து வெளியிட்ட பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின், தொழிலாளர்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் வகையில் தமது கட்சி புதியதொரு அமைச்சை உருவாக்குமெனக் கூறியுள்ளார்.

மேலும், தொழிலாளர்கள் தங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும் தங்களது தொழில் உரிமைகளை பலப்படுத்தவும், தொழிலாளர்களுக்கு அதிக அதிகாரங்களை தாம் வழங்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் தொழிலாளர்களுக்கான சம்பளக் குறைப்பு, நவீன வரலாற்றில் மிக மோசமானதாகக் காணப்படுவதாக அவதானிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)