Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முடிவுக்கு வந்தது வன்னியின் பெரும் சமர்!

In
Updated: 07:08 GMT, May 13, 2018 | Published: 07:08 GMT, May 13, 2018 |
0 Comments
1118
This post was written by : Jeyachandran Vithushan

கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் இடையிலான 8 ஆவது வன்னியின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. குறித்த போட்டியானது கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய நிலையில் நேற்று (சனிக்கிழமை) முடிவுக்கு வந்தது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணியினர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களமிறங்கிய நிலையில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 63 ஓட்டங்களை மாத்திரமே பெற்றனர்.

இதற்கு பதிலளித்த கிளிநொச்சி மத்திய மகாவித்தயாலய அணி 26.1 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 103 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் மழையால் தடைப்பட்டது.

இதற்கமைய போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் சனிக்கிழமை இடம்பெற்ற நிலையில், கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி 36. 5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பிரவீந்தன் ஆட்டமிழக்காது 53 பந்துகளை எதிர்கொண்டு 40 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் அணி சார்பாக சதுசன் 15 ஓவர்களில் 53 ஓட்டங்களை கொடுத்து 5 விக்கட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி தனது இரண்டாவது இனிங்சிற்காக ஆறு விக்கட் இழப்பிற்கு 46 ஓவர்களில் 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இந்த நிலையில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணியின் துடுப்பாட்ட வீரர்கள் அனுமதியின்றி மைதானத்திற்கு வெளியே சென்று திரும்பியிருந்தனர்.

இதனால் அந்த அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கையில் இருந்து ஐந்து ஓட்டங்கள் பெனால்டி அடிப்படையில் கிளிநொச்சி மகாவித்தியாலய அணி வழங்கப்பட்டது. இதனால் அந்த அணியின் மொத்த ஓட்ட எண்ணிக்கை 160 ஆக பதிவாகியது.

இரண்டாவது இனிங்சில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி அணி சார்பில் சதுசன் ஆட்டமிழக்காது 20 ஓட்டங்களை பெற்றிருந்ததுடன், நிலக்சன் 1 ஓட்டம் பெற்றிருந்த வேளை போட்டி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

கிளிநொச்சி மகாவித்தியாலய அணி சார்பில் இரண்டாவது இனிங்சில் யசிக்குமார் 8 ஓவர்கள் பந்து வீசி 2 விக்கட்டுகளை கைப்பற்றியிருந்தார். இதன் காரணமாக 8 ஆவது வன்னியின் பெரும் சமர் கிரிக்கெட் சுற்றுப்போட்டி சமனிலையுடன் முடிவுக்கு வந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)