Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்ப்பின் ஆட்சியினால் ஐரோப்பிய ஒன்றியப் பங்காளர்களை இழக்கும் சாத்தியம்!

In
Updated: 08:54 GMT, May 13, 2018 | Published: 08:54 GMT, May 13, 2018 |
0 Comments
1115
This post was written by : Suganthini

நம்பிக்கையுடன் நடக்கும் ஐரோப்பிய ஒன்;றியப் பங்காளர்களை இழக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சி அமைந்துள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளரும் கல்வியாளருமான ஜேம்ஸ் பெட்ராஸ் எச்சரித்துள்ளார்.

சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக 12க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்ட ஜேம்ஸ் பெட்ராஸ், பிரஸ் தொலைக்காட்சிச் சேவைக்கு நேற்று (சனிக்கிழமை) வழங்கிய பிரத்தியேகச் செவ்வியின்போதே, அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தித்திட்ட உடன்படிக்கையிலிருந்து விலகுவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த அதேவேளை, இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்ட ஏனைய நாடுகளான பிரித்தானியா, ஜேர்மன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகியன உடன்படிக்கையைத் தொடர விருப்பம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், ஐரோப்பியப் பங்காளர்களுடன் இணைந்து இந்த உடன்படிக்கையைப் பேணுவதில் தாம் உறுதியாகவுள்ளதாக, ட்ரம்ப்பை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்ட பிரித்தானிய பிரதமர் தெரேசா மே கூறியுள்ளார்.

இதனைச் சுட்டிக்காட்டிக் கருத்து வெளியிட்ட அவர், ‘ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தித்திட்ட உடன்படிக்கையை அமெரிக்கா கைவிடுவதன் மூலம் அமெரிக்காவுக்கும் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியப் பங்காளர்களுக்குமிடையில் பாரிய பிளவு ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக நாம் எதிர்பார்க்கின்றோம்’ என்றார்.

இதுவொரு முக்கியமான அரசியல் நடவடிக்கையெனத் தெரிவித்துள்ள அவர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆட்சி மூலம் நம்பிக்கையாகச் செயற்பட்டுவரும் ஐரோப்பிய ஒன்றியப் பங்காளிகளை இழக்கும் வாய்ப்பை எடுத்துக்காட்டுவதாகவும் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)