Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதிய சுங்க ஏற்பாட்டுக்கான யோசனையை முன்வைத்துள்ளதாக தெரேசா மே அறிவிப்பு

In
Updated: 09:23 GMT, May 13, 2018 | Published: 09:23 GMT, May 13, 2018 |
0 Comments
1050
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய சுங்க ஏற்பாடுகளைக் கடைப்பிடிப்பதற்கான யோசனையைத் தான் முன்வைத்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரெக்சிற் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, இந்த விடயம் தொடர்பாகக் கவனஞ்செலுத்தப்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியதாக, சர்வதேச ஊடகமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத் திணைக்களத்திலிருந்து நாம் வெளியேறும் அதேவேளை, சுயாதீனமான வர்த்தகக்கொள்கையை நாம் பேண வேண்டும். அத்துடன், எமது நலன்சார்ந்த வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையையும் நாம் தொடர வேண்டும்’ என்றார்.

மேலும், ‘அயர்லாந்துடன் கடினமான எல்லைத் திட்டத்தைக்; கடைப்பிடிக்காமல், ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத் திணைக்களத்திலிருந்து நாம் வெளியேற வேண்டும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)