Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜெருசலேமில் அமெரிக்கத் தூதரகத்தை திறக்க நடவடிக்கை

In உலகம்
Updated: 10:19 GMT, May 13, 2018 | Published: 10:19 GMT, May 13, 2018 |
0 Comments
1116
This post was written by : Suganthini

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஒருதலைப்பட்சமான அறிவிப்பினால் ஏற்பட்டுள்ள சர்ச்சைக்கு மத்தியில், இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் நாளை (திங்கட்கிழமை) ஜெருசலேமில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இதுவரைகாலமும் ரெல் அவ்விவ்வில் இயங்கிவந்த அமெரிக்கத் தூதரகமே ஜெருசலேமுக்கு மாற்றப்படுவதாக, சர்வதேச ஊடகமொன்று கூறியுள்ளது.

புனித நகரான ஜெருசலேமை, இஸ்ரேல் தமது தலைநகரென்றும் கிழக்கு ஜெருசலேம் தமது தலைநகரென்று பலஸ்தீனமும் கூறிவந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி; ட்ரம்ப் கடந்த டிசெம்பர் 6ஆம் திகதி ஒருதலைப்பட்சமாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரித்தார். இந்நிலையில், ரெல் அவ்வில் இயங்கிவரும் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படுமெனவும், அவர் அறிவித்திருந்தார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஒருதலைப்பட்சமான இந்த அறிவிப்பை வேறு எந்தவொரு நாடும் ஏற்றுக்கொள்ளவில்லையென்பதுடன், ட்ரம்ப்பின் இந்தத் தீர்மானம் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான சமாதான முயற்சியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)