Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸில் கத்திக்குத்தை நடத்தியவரது நண்பன் கைது!

In ஐரோப்பா
Updated: 03:18 GMT, May 14, 2018 | Published: 03:18 GMT, May 14, 2018 |
0 Comments
1075
This post was written by : Suganthini

பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் தாக்குதல் நடத்தியவரின் நண்பன் கைதுசெய்யப்பட்டதோடு, அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தலைநகர் பரிஸில் இரவுநேர கேளிக்கை நிகழ்வுகளுக்கு பெயர்போன இடமொன்றில் நேற்றுமுன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததோடு நால்வர் படுகாயமடைந்தனர்.

அத்துடன், இந்தக் கத்திக்குத்தை நடத்தியவரை பொலிஸார் பிடிக்க முற்பட்டபோது, ஒபெரா மாவட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில்  அவர்   உயிரிழந்தார். இந்தச் சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணையை நடத்திவந்த பொலிஸார், கத்திக்குத்தை நடத்தியவரின் நண்பரைக் கைதுசெய்து விசாரித்தபோது, கத்திக்குத்தை நடத்தியவரை பற்றிய விபரங்களை கண்டுபிடித்துள்ளனர்.

ரஷ்ய குடியரசரின் செச்சினியாவைச் சேர்ந்தவரும் 1997ஆம் ஆண்டு பிறந்தவருமான குறித்த சந்தேகநபர், பிரான்ஸில் குடியுரிமை பெற்றிருந்தார். அத்துடன், பிரான்ஸின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் காணப்படுபவர்களின் பட்டியலில் இவர் உள்ளடக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)