Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்பெய்ன் மகாராணியின் வைரக்கல் நாளை ஏலம்

In
Updated: 03:33 GMT, May 14, 2018 | Published: 03:33 GMT, May 14, 2018 |
0 Comments
1037
This post was written by : Suganthini

ஸ்பெய்ன் அரச குடும்பத்தினர் பயன்படுத்திய சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஃபர்னீஸ் நீல வைரக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) ஏலத்துக்கு வருகின்றது.

ஸ்பெய்னைச் சேர்ந்த மகாராணியான எலிஸபெத் ஃபர்னீஸ் (Elisabeth Farnese)  அந்நாட்டு மன்னர் பிலிப்பை (v) 1715ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி மணம் புரிந்தபோது, கரு நீல நிறத்தையுடைய இவ்வைரக்கல் மகாராணிக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்நிலையில், இவ்வைரக்கல்லை மகாராணியின் 7 தலைமுறையினர் பயன்படுத்திய நிலையில், முதன்முறையாக ஏல விற்பனைக்கு விடப்படுவதாக சொதேபி ( Sotheby) ஏல விற்பனை நிலையத்தின் ஏல விற்பனையாளர் தெரிவித்துள்ளார்.

தென் மத்திய இந்தியாவின் கோல்கொண்டா வைரச் சுரங்கத்திலிருந்து பெறப்பட்ட கரு நீல நிறமானதும் 6.16 கரட்டைக் கொண்டதுமான இவ்வைரக்கல், 3.7 மில்லியன் அமெரிக்க டொலர் முதல் 5.3 மில்லியன் அமெரிக்க டொலர்வரை விற்பனையாகுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)