Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் அச்சுறுத்தலாக காணப்படும் ஐ.எஸ்

In ஐரோப்பா
Updated: 04:06 GMT, May 14, 2018 | Published: 04:06 GMT, May 14, 2018 |
0 Comments
1037
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் பேரழிவை ஏற்படுத்தும் வகையில் மிகவும் அச்சுறுத்தலாகக் காணப்படுவதாக பிரித்தானியாவின் புலனாய்வு மற்றும் பாதுகாப்புச்சேவை முகவரகம் எச்சரித்துள்ளது.

எம்.15 என அழைக்கப்படும் புலனாய்வு மற்றும் பாதுகாப்புச்சேவை முகவரகத்தின் பணிப்பாளர் நாயகம் அன்ட்ரூ பார்க்கர் (Andrew Parker) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்புத்துறைத் தலைவர்களுடன் பேர்லினில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், கடந்த 2017ஆம் ஆண்டு வெஸ்ட்மினிஸ்டரில் இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின்னர், பிரித்தானியாவில் 12 பயங்கரவாதத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

மேலும், கடந்த வருடத்தில் பாதுகாப்புச் சேவையினராலும் பொலிஸாரினாலும், 9 தாக்குதல் சம்பவங்கள் முறியடிக்கப்பட்டதாக கடந்த டிசெம்பரில் அவர் கூறியிருந்த நிலையில், இந்த எண்ணிக்கை அதிகரிப்பை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரான்ஸில் இடம்பெற்ற அண்மைய கத்திக்குத்துச் சம்பவம் மற்றும் ரஷ்யாவின் முன்னாள் உளவாளி நஞ்சூட்டப்பட்ட விவகாரம் ஆகியவற்றுக்கும் இந்தச் சந்திப்பின்போது அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)