Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதன் முறையாக மெட்ரிட் பகிரங்க கிண்ணத்தை முத்தமிட்டார் ஸ்வெரவ்!

In டெனிஸ்
Updated: 04:33 GMT, May 14, 2018 | Published: 04:33 GMT, May 14, 2018 |
0 Comments
1059
This post was written by : Anojkiyan

ஸ்பெய்னில் நடைபெற்ற மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜேர்மனிய வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஜேர்மனிய வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ், உலகின் 7ஆம் நிலை வீரரான டொமினிக் த்யீம்மை எதிர்கொண்டார்.

மிகவும் விறுவிறுப்பாக அரங்கேறிய இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரு வீரர்களும் கடும் ஆக்ரோஷத்துடன் விளையாடினார்கள்.

ஆனால் இந்த போட்டியில் ஸ்வெரோவிற்கு, த்யீம் கடும் அழுத்தம் கொடுத்தார் என்றபோதிலும் த்யீமின் அழுத்தத்தையும், சவாலையும் ஸ்வெரவ் சாதுர்யமாக எதிர்கொண்டார்.

முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய ஸ்வெரவ், இரண்டாவது செட்டையும் 6-4 என கைப்பற்றினார். இதனால், 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற அவர் முதன்முறையாக மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் கிண்ணத்தை முத்தமிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg