Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

என்னை நம்புங்கள்: சிறந்த பிரெக்சிற்றை பெற்றுத்தருவதாக தெரேசா மே வாக்குறுதி

In
Updated: 04:49 GMT, May 14, 2018 | Published: 04:49 GMT, May 14, 2018 |
0 Comments
1116
This post was written by : Suganthini

பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக தன் மீது நம்பிக்கை வைத்து நடக்குமாறு பொதுமக்களிடம் பிரித்தானிய பிரதமர் தெரேசா மே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியின்போது அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்ததாக சர்வதேச ஊடகமொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தி வெளியிட்டது.

அச்செவ்வியில் அவர் மேலும் கூறியதாவது ‘சிறந்த பிரெக்சிற்றை என்னால் பெற்றுத்தர முடியும். ஆகையால், பிரெக்சிற் தொடர்பாக பொதுமக்கள் என்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்’ என்றார்.

அத்துடன், ‘எமது நாட்டுப் பணம் வெளியில் போகாதவாறு கட்டுப்பாட்டினுள் கொண்டுவரவும் நான் உறுதிசெய்வேன்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவுள்ள பிரித்தானியா அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது, இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத்திணைக்களம் மற்றும் ஒற்றைச்சந்தையிலிருந்து வெளியேறுவது தொடர்பாக பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

பிரெக்சிற்றுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத்திணைக்களத்திலிருந்து வெளியேற வேண்டுமென, பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் வலியுறுத்தும் அதேவேளை, குறித்த யோசனையை பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கம் கைவிட வேண்டுமென பிரித்தானிய அமைச்சர்கள் வலியுறுத்துகின்றனர். அத்துடன், பங்குதாரர்கள் பயனுடைய வர்த்தக உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பார்களென்பதில் சாத்தியமில்லையெனவும் அமைச்சர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், சுங்கக்கூட்டணியில் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் பிரித்தானியா வரிக்கட்டணத்தைச் சேகரிக்க வேண்டுமென பிரதமர் தெரேசா மே விரும்பும் அதேவேளை, கண்காணிப்புச் சோதனைக்குட்படாத தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாற்றுத்திட்டத்தை பயன்படுத்தவுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் பொரிஸ் ஜோன்ஸன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg