Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெற்றிக்கு என்ன காரணம்? – மனம் திறந்தார் மெட்ரிட் கிண்ணம் ஏந்திய ஸ்வெரவ்!

In டெனிஸ்
Updated: 05:10 GMT, May 14, 2018 | Published: 05:10 GMT, May 14, 2018 |
0 Comments
1074
This post was written by : Anojkiyan

மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டம் வென்றதற்கு ஆரம்பத்தில் சில போட்டிகளைத் தவிரத்தமையே காரணம் என அலெக்சாண்டர் ஸ்வெரவ் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஸ்பெயினில் நடைபெற்ற மெட்ரிட் பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிபோட்டியில், ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரவ், டொமினிக் த்யீம்மை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார்.

இந்த வெற்றியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவித்த அவர், “எனது வாழ்வில் மிகப்பெரிய டென்னிஸ் தொடரை விளையாடியுள்ளேன். ‘ஏ.ரீ.பி. வேர்ல்ட் டூர் மாஸ்டர்ஸ் 1000’ கிண்ணத்தை வென்றதில் மகிழ்ச்சி. இது எனது மூன்றாவது கிண்ணம் என்பதுடன், களிமண் தரையில் இரண்டாவது கிண்ணமாகும்.

இந்த வெற்றியின் மூலம் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதே உத்வேகத்துடன், ரோம் தொடரையும் எதிர்கொள்ளலாம் என்று நம்புகிறேன்.

எனக்கு இந்த தொடர் கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது, நான் தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் விளையாடியுள்ளேன். ஆரம்பத்தில் சில போட்டிகளைத் தவிர்த்தமையினால், அது இந்த கிண்ணத்தை வெற்றி கொள்ள உதவியாக இருந்தது” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg