Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட இந்தியாவை உலுக்கிய புழுதி புயல்: உயிரிழப்புக்கள் அதிகரிப்பு(2ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 05:48 GMT, May 14, 2018 | Published: 05:48 GMT, May 14, 2018 |
0 Comments
1066
This post was written by : Ravivarman

வட இந்தியாவில் நேற்று வீசிய புழுதி புயல் காரணமாக 26 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழப்புக்கள் 60ஆக உயர்வடைந்துள்ளன.

70 கி.மீ வேகத்தில் வீசிய இப் புயலின் தாக்கம் காரணமாக, கட்டடங்கள் இடிபாட்டிற்கு உள்ளாகியுள்ளதோடு,  மக்கள் தமது உடமைகளையும் இழந்துள்ளனர்.

அத்துடன் கடந்த வாரமும் இதே போன்று புழுதிப் புயல் தாக்கியதில் 134 பேர் உயிரிழந்ததோடு, 400 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை குறித்த புழுதி புயலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பதிவின் மூலம் இரங்கள் கருத்தை வெளியிட்டுள்ள பிரதமர், “நாட்டின் சில மாநிலங்களில் புழுதி புயல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனிடம் வேண்டுகிறேன்” என பிரதமர் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உ.பி. – டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதிப்புயல்: 41 பேர் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் புழுதிப்புயல் மற்றும் மின்னல் தாக்கியதில் இதுவரையில் 41 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புழுதி புயலுக்கு உத்தரப்பிரதேசத்தில் 18 பேரும், டெல்லியில் 2 பேரும், மின்னல் தாக்கியதில் மேற்கு வங்கத்தில் 12 பேரும், ஆந்திராவில் 9 பேரும் என மொத்தம் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதனால் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டதுடன், பல விமானங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டரில் தெரிவிக்கையில்,’நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மாநிலங்களில் மழை மற்றும் புழுதிப்புயல் காரணமாகப் பலர் உயிரிழந்தமை வருத்தம் அளிக்கிறது. இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த அனர்த்தம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில், மின்னல் தாக்கியதில் ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில் 18 பேர் உயிரிழந்தமை தொடர்பான தகவல் அறிந்து வருந்தினேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிப்பு அடைந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளை காங்கிரஸ் கட்சியினர் விரைந்து வழங்கவேண்டும் எனவும் பதிவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)