Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசர் ஹரி திருமணம்: விருந்துபசாரத்திலும் புதுமணத் தம்பதியினர் கவனம்

In
Updated: 06:48 GMT, May 14, 2018 | Published: 06:48 GMT, May 14, 2018 |
0 Comments
1085
This post was written by : Suganthini

தமது திருமண வைபவ விருந்துபசாரத்துக்காகத் தயாரிக்கப்படும் உணவுகளில் உள்ளூர் பருவகால உற்பத்திகளை சேர்க்குமாறு இளவரசர் ஹரி –மேகன் மாக்கில் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் ஹரிக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகையான மேகன் மாக்கிலுக்கும் எதிர்வரும் சனிக்கிழமை வின்ஸ்டர்கோட்டையிலுள்ள சென். ஜோர்ஜ் தேவாலயத்தில் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், தமது திருமண வைபவத்துக்கு வருகைதரும் விருந்தினர்களுக்கு பரிமாறப்படும் உணவு தொடர்பாகவும் இளவரசர் ஹரியும் மேகன் மாக்கிலும் கவனஞ்செலுத்தியுள்ள நிலையில், வின்ஸ்டர்கோட்டையிலுள்ள அரச குடும்பத்துக்கான சமையலறை ஊழியர்களிடம் அவர்கள் இதனைக் கூறியுள்ளனர்.

திருமண வைபவத்துக்கான உணவுத் தயாரிப்பில் சமையற்கலை நிபுணர், உதவியாளர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் தயாராகி வருகின்றனர்.

இது தொடர்பாகத் தெரிவித்த அரச குடும்பத்துக்கான சமையற்கலை நிபுணர் மார்க் ஃபிளானகன் (Mark Flanagan), ‘இளவரசர் ஹரி –மேகன் மாக்கிலின் திருமண நாளன்று பரிமாறப்படும் உணவு தொடர்பாக புதுமணத் தம்பதியினர் கவனஞ்செலுத்தியுள்ளதுடன் பரிமாறப்படும் உணவு மாதிரிகளையும் அவர்கள் சுவைத்துள்ளனர்.

அத்துடன், தற்போதைய பருவகாலத்தில் உற்பத்தியாகும் மரக்கறிகளைக் கொண்டு உணவுகளைத் தயாரிக்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்’ என்றார்.

எனினும், திருமண வைபவத்தின்போது எவ்வகையான உணவுகள் பரிமாறப்படுமென்பது தொடர்பான விவரங்களை சமையற்கலை நிபுணர் வெளியிடவில்லை.

இதேவேளை, ஹரி –மேகன் மாக்கிலின் திருமண வைபவத்தின்போது பரிமாறுவதற்காக lemon மற்றும் elderflower கொண்ட திருமணக்கேக்கை கிழக்கு லண்டன் வெதுப்பகத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)