Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முள்ளிவாய்க்காலில் மாகாணசபை உறுப்பினர்கள் விசேட ஆய்வு!

In இலங்கை
Updated: 07:35 GMT, May 14, 2018 | Published: 07:35 GMT, May 14, 2018 |
0 Comments
1068
This post was written by : Ravivarman

மே 18 தமிழ் இன அழிப்பு நாளை உணர்வுபூர்வமாக கொண்டாடுவது குறித்து விசேட ஆய்வு மற்றும் கலந்துரையாடல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடத்தப்படவுள்ள இடத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்ற வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள், இந்த விசேட ஆய்வில் ஈடுபட்டனர்.

இதன்போது, வட.மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட வட.மாகாணசபை உறுப்பினர்கள், வட.மாகாண அமைச்சின் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை எவ்வாறு நடத்துதல், யார் யாருக்கு எவ்வாறான பொறுப்புக்களை வழங்குவது என்றும் இதன்போது, ஆராயப்பட்டுள்ளது.

இதற்கமைய, தள ஒழுங்குகளை அமைக்கும் பணிகள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக, சி.வி.கே.சிவஞானம் குறிப்பிட்டார்.

ஏனைய ஒழுங்குகள் பாதுகாப்பு, போக்குவரத்து, நீர்விநியோகம், உள்ளிட்ட பொதுச் சேவைகள் கடந்த ஆண்டுகளில் நடைபெற்றதைப் போல், இந்த ஆண்டும் வட.மாணசபை உறுபினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)