Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோன்பை அனுஷ்டிக்கத் தயாராகும் ரோஹிங்கியா அகதிகள்

In உலகம்
Updated: 07:41 GMT, May 14, 2018 | Published: 07:41 GMT, May 14, 2018 |
0 Comments
1057
This post was written by : Suganthini

புனித ரமழான் நோன்பை அனுஷ்டிப்பதற்காக பங்களாதேஷிலுள்ள ரோஹிங்கியா அகதிகள் தயாராகி வருகின்றனர்.

மியன்மாரின் ராக்ஹீன் மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் மாத இறுதியில் ஆரம்பித்த வன்முறையினால் பாதிக்கப்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் சுமார் 7 லட்சம் பேர் பங்களாதேஷில் அகதிகளாகத் தஞ்சம் கோரிய நிலையில் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், மூங்கில் கம்புகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள கூடாரங்களில் அவல வாழ்க்கையை வாழ்ந்துவரும் இந்த அகதிகள், பிறை இந்த வாரம் தென்படுமென்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நோன்பை அனுஷ்டிப்பதற்காக தயாராகி வருவதாக சர்வதேச ஊடகமொன்று கூறியுள்ளது.

மேலும், பங்களாதேஷில் ஜுன், ஜுலை மாதக் காலப்பகுதிகளில் பருவகால மழை பெய்யும். இம்முறை இக்காலப்பகுதியிலேயே நோன்பு பெருநாளும் வருகின்றது. ஆகையினால், நோன்புக்கு மத்தியில் மழை வெள்ளத்தினால் ரோஹிங்கியா அகதிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக உதவி முகவரகங்கள் தெரிவித்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)