Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வின்ட்ரஷ் சமூகத்தினர்: ஊழலில் சிக்க நேரிடுமென லண்டன் மேயர் எச்சரிக்கை

In
Updated: 08:32 GMT, May 14, 2018 | Published: 08:32 GMT, May 14, 2018 |
0 Comments
1077
This post was written by : Suganthini

பிரித்தானியாவிலுள்ள வின்ட்ரஷ் சமூகத்தினர் சார்பாக மற்றுமொரு பாரிய ஊழலில் அரசாங்கம் சிக்க நேரிடலாமென லண்டன் மேயர் ஸாதிக் ஹான் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் வசித்துவரும் வின்ட்ரஷ் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களும் இளம் பிராயத்தினரும் குடியுரிமையைப் பெற்றுக்கொள்வதற்காக ஆயிரம் பவுண்ட்ஸ் கட்டணம் செலுத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இக்கட்டணத்தைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் வேலைவாய்ப்பு மற்றும் கல்விச் செயற்பாடுகளிலிருந்து வின்ட்ரஷ் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்களும் இளம் பிராயத்தினரும் புறக்கணிக்கப்படுகின்றனர். இதன் காரணமாகவே வின்ட்ரஷ் சமூகத்தினர் சார்ந்த மற்றுமொரு பாரிய ஊழலில் அரசாங்கம் சிக்க நேரிடலாமெனவும் அவர் கூறியுள்ளார்.

1940ஆம் ஆண்டு முதல் 1970ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில், தொழில் நடவடிக்கைகளுக்காக கரீபியன் நாடுகளிலிருந்து பிரித்தானியாவுக்கு அழைத்துவரப்பட்ட வின்ட்ரஷ் சமூகத்தினரின் சந்ததியினர் இரண்டாம் தரப் பிரஜைகளாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுக் காணப்படுகின்றது. அத்துடன், இவர்களுக்கு சட்டபூர்வமான குடியுரிமை இல்லாத காரணத்தினால் வேலைவாய்ப்பு, கல்வி, வங்கிக் கணக்கை பேண முடியாமை உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.

ஏற்கெனவே இச்சமூகத்தினரை வெளியேற்றுவது தொடர்பான சர்ச்சையில் சிக்கிய பிரித்தானியாவின் உட்துறைச் செயலாளர் அம்பர் ருட் தனது பதவியை அண்மையில் ராஜினாமாச் செய்ததுடன் அப்;பதவிக்கு புதிய உட்துறைச் செயலாளராக சஜிட் ஜாவிட் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)