Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இளவரசர் ஹரி திருமணம்: சுமார் 5,000 ஊடக நிறுவனங்கள் பதிவு

In
Updated: 09:30 GMT, May 14, 2018 | Published: 09:30 GMT, May 14, 2018 |
0 Comments
1096
This post was written by : Suganthini

பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமண வைபவ செய்தி சேகரிப்புக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது.

அத்துடன் இவர்களின் திருமண வைபவத்தில் புகைப்படம் எடுப்பதற்காக 160க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்களும் 79 சர்வதேச தொலைக்காட்சி வலைத்தளங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவ்வரண்மனை மேலும் கூறியுள்ளது.

பிரித்தானிய முடிக்குரிய அரியாணையின் ஆறாவது வாரிசும் இரண்டாம் எலிஸபெத் மகாராணியின் பேரப்பிள்ளையுமான இளவரசர் ஹரியின் திருமணம் அமெரிக்காவைச் சேர்ந்த தொலைக்காட்சி நடிகையான மேகன் மாக்கிலுடன் எதிர்வரும் சனிக்கிழமை வின்ஸ்டர்கோட்டையிலுள்ள சென். ஜோர்ஜ் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.

இளவரசர் ஹரியின் பெற்றோரான வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் – மறைந்த வேல்ஸ் இளவரசி டயானாவின் திருமணம் 1981ஆம் ஆண்டு நடைபெற்றபோது அத்திருமணத்தை சுமார் 750 மில்லியன் பேர் தொலைக்காட்சி வாயிலாகக் கண்டுகளித்தனர்.

இதேவேளை,  இளவரசர் ஹரியின் மூத்த சகோதரரான இளவரசர் வில்லியம் -கேட் மிடில்ட்டனின் திருமணம்  கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்றபோது அத்திருமணத்தை சுமார் இரண்டு பில்லியன் கணக்கான மக்கள் தொலைக்காட்சி வாயிலாகக் கண்டுகளித்தனர்.

இந்நிலையில், இந்த வருடத்தில் நடைபெறும் அரச குடும்பத்தின் மிகப் பிரமாண்டமான இளவரசர் ஹரியின் திருமணத்தையும் பெருமளவானோர் கண்டுகளிக்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)