Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸில் ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடர்கின்றது

In ஐரோப்பா
Updated: 09:58 GMT, May 14, 2018 | Published: 09:58 GMT, May 14, 2018 |
0 Comments
1040
This post was written by : Suganthini

பிரான்ஸ் அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்தத்தைக் கண்டித்து ரயில்வே ஊழியர்கள் முன்னெடுக்கும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் தொடர்கின்றது.

இந்நிலையில், பிரான்ஸில் ரயில்வே ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) ஒன்பதாம் கட்டமாக பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். இதன்; காரணமாக ரயில் போக்குவரத்துகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் பாரிய சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, எதிர்வரும் ஜுன் 28ஆம் திகதி பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவும் ரயில்வே ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர்.

பிரான்ஸில் புதிய பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்தை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடந்த வருடம் முன்வைத்துள்ளார். இந்நிலையில, இச்சீர்திருத்தம் மீதான வாக்கெடுப்பை இந்த வாரம் நடத்த தொழிற்சங்கங்களுக்கு எ.என்.சி.ஃஎப் ரயில்வே நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)