Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணு ஒப்பந்தம்: ரஷ்ய -ஈரானிய வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடல்

In
Updated: 10:38 GMT, May 14, 2018 | Published: 10:38 GMT, May 14, 2018 |
0 Comments
1049
This post was written by : Suganthini

ஈரானின் அணுசக்தித்திட்ட உடன்படிக்கை தொடர்பாக ரஷ்ய மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜாவிட் ஸரிப், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவை மொஸ்கோவில் இன்று (திங்கட்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட அணுசக்தித்திட்ட உடன்படிக்கை தொடர்பாக கவனஞ்செலுத்தியதுடன், அந்த உடன்படிக்கையை பாதுகாக்கும் நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடியதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் ஈரான் அணுசக்தித்திட்ட உடன்படிக்கையை பேண இணங்கியுள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஆட்சிக்காலத்தில் செய்துகொள்ளப்பட்ட ஈரானின் அணுசக்தித்திட்ட உடன்படிக்கையைக் கைவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

எனினும் இந்த உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள ரஷ்யா, பிரான்ஸ், ஜேர்மன், பிரித்தானியா, சீனா ஆகியன உடன்படிக்கையை பேணுவதாக உறுதியளித்துள்ளன.

இது தொடர்பாக அமெரிக்காவுக்கும் உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ள ஏனைய நாடுகளுக்குமிடையில் சர்ச்சை காணப்படும் நிலையில் ரஷ்ய மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர்கள் சந்தித்து அணுசக்தித்திட்ட உடன்படிக்கை தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)