Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னாரில் சட்டவிரோதமாக கற்றாழைச் செடிகள் சேகரிப்பு: மூவர் கைது!

In இலங்கை
Updated: 03:32 GMT, May 15, 2018 | Published: 03:32 GMT, May 15, 2018 |
0 Comments
1079
This post was written by : Ravivarman

வங்காலை, கற்றாழைப்பிட்டிப் பகுதியில் கற்றாழைச் செடிகளைச் சட்டவிரோதமாகச் சேகரித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வனஜீவராசிகள் திணைக்களத்திற்குச் சொந்தமான கற்றாழைப்பிட்டி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை)  கற்றாழைச் செடிகளை உரிய ஆவணங்கள் இன்றிச் சேகரித்த போதே மன்னார் தாரபுரத்தைச் சேர்ந்த அவர்கள் கைது செய்யப்பட்டதாக வங்காலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கற்றாழைப்பிட்டிக் காட்டுப் பகுதியில் நேற்றுக்காலை சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆட்களின் நடமாட்டத்தை அப்பிரதேச மக்கள் அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த பிரதேசத்திற்கு விரைந்த பொலிஸார் நாற்பதுக்கு மோற்பட்ட பைகளில் நிரப்பப்பட்டுக் கொண்டு செல்வதற்குத் தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த கற்றாழைச் செடிகளைக் கைப்பற்றியதுடன், கைது செய்யப்பட்ட மூவரையும் மேலதிக விசாரணகளுக்காக பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக தாராபுரம், எருக்கலம்பிட்டி, வங்காலை, கற்றாழைப்பிட்டி, ஆகிய பகுதிகளில் அதிகளவிலான கற்றாழைச் செடிகள் காணப்படுகின்றன.

மக்களின் மருத்துவ தேவைக்காக கற்றாழைச் செடிகள் அதிகம் பயன்படுத்தப்படுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் குறித்த பிரதேச மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)