Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முதலிடத்தில் பார்சிலோனா: கருத்துக்கணிப்பில் ரியல் மாட்ரிட் பின்னடைவு

In உதைப்பந்தாட்டம்
Updated: 03:41 GMT, May 15, 2018 | Published: 03:41 GMT, May 15, 2018 |
0 Comments
1042
This post was written by : Jeyachandran Vithushan

உலகின் பலமான கால்பந்து அணியின் அடையாளமாக இருந்த ரியல் மாட்ரிட் அணியை பின்னுக்கு தள்ளி பார்சிலோனா முன்னேறியுள்ளது. ‘கால்பந்தின் பலமான அடையாளம்’ (strongest football brand) என்ற தலைப்பில் பிராண்ட் நிதி ஆலோசனை நிறுவனம் ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விடையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பார்சிலோனா அணி பல்வேறு புதிய ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றது, அதன்படி ஜப்பானின் இ-வணிகம் மூலம் நான்கு வருடத்திற்கு 246 மில்லியன் யூரோவிற்கு ஒப்பந்தமாகியுள்ளது.

இதன் காரணமாக பார்சிலோனாவின் பிராண்ட் வலிமை 95.4 விகிதத்தில் இருந்து 96.6 விகிதத்திற்கு உயர்வடைந்துள்ளது. அதேவேளையில் ரியல் மாட்ரிட் அணியின் பிராண்ட் வலிமை 96.4 விகிதமாகவே காணப்படுகின்றது.

இதன் காரணமாகவே பார்சிலோனா அணி முதலாவது இடத்தை பிடிப்பதற்கு காரணம் என அந்த நிறுவனம் கூறியுள்ளதுடன், இந்த கருத்துக் கணிப்பானது ரசிகர்களின் கருத்தில் இருந்து பெறப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த கருத்துக்கணிப்பில் மான்செஸ்டர் யுனைடெட் (94.6) 3 ஆவது இடத்திலும், பேயர்ஸ் முனிச் (93.1) 4 ஆவது இடத்திலும், லிவர்பூல் (92.2) 5 ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg