Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மின்னல்தாக்கி மாணவன் உயிரிழப்பு!

In இலங்கை
Updated: 03:59 GMT, May 15, 2018 | Published: 03:57 GMT, May 15, 2018 |
0 Comments
1041
This post was written by : poovannan

முத்தையன்கட்டு – ஜீவநகர் பகுதியில் மின்னல் தாக்கியமையினால் பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியைச் சேர்ந்த பி.தினேஸ்குமார் (வயது 14) என்ற அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு நேற்று (திங்கட்கிழமை) மாலை 3.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இம்மாணவன் உணவு உட்கொண்டிருந்த வேளையில் மின்னல்தாக்கத்திற்கு இலக்காகி வீழ்ந்துள்ளான். பின்னர் அயலவர்களின் உதவியுடன் அம்மாணவன் ஒட்டுசுட்டான் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மாஞ்சோலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.

இந்தப் பகுதியில் மழைகாலங்களில் இவ்வாறான மின்னல்தாக்கங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்துவந்த அம்மாணவனுக்கு அண்மையில் பாடசாலை நிர்வாகத்தின் உதவியுடன் புதிய துவிச்சக்கர வண்டியொன்றும் வழங்கிவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)