Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலி பகிரங்க டென்னிஸ்: அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வீரர்கள்

In டெனிஸ்
Updated: 04:27 GMT, May 15, 2018 | Published: 04:27 GMT, May 15, 2018 |
0 Comments
1038
This post was written by : Jeyachandran Vithushan

இத்தாலி ரோம் நகரில் நடைபெற்றுவரும் இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரில் ஜொகோவிச், டேவிட் கொஃப்பின், நிஷிகோரி அகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

கடந்த 11 ஆம் திகதி ஆரமபமான குறித்த தொடரின் தகுதிகான் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) முதல் சுற்றுப் போட்டிகள் நடைபெற்றன.

இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் செர்பிய வீரர் நொவாக் ஜொகோவிச், அலெக்ஸாண்டர் டொல்கொபொலொவ்வை எதிர்கொண்டார். இதில் 6-1 மற்றும் 6-3 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்ற ஜொகோவச் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.

அத்துடன் மற்றுமொரு போட்டியில், பெல்ஜிய வீரர் டேவிட் கொஃப்பின் மற்றும் ஆஜர்ன்டீன வீரர் லியர்னாடோ மேயருடன் பலப்பரீட்சை நடத்தினார். இந்த போட்டியில் மிக 6-1 மற்றும் 6-2 நேர் செட் கணக்கில் இலகுவாக வெற்றி பெற்ற கொப்பின் அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.

அதேபோல் மற்றுமொரு போட்டியில்இ ஜப்பான் வீரர் நிஷிகோரியும், ஸ்பெயின் வீரர் ஃபெலிசியானோ லோபஸூம் மோதிக்கொண்டனர். இந்த போட்டியில் நிஷிகோரி போராடி 7-6 மற்றும் 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg