Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உலக டென்னிஸ் தரவரிசையில் பெடரர் மீண்டும் முன்னிலை

In டெனிஸ்
Updated: 04:49 GMT, May 15, 2018 | Published: 04:45 GMT, May 15, 2018 |
0 Comments
1047
This post was written by : Jeyachandran Vithushan

உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் சுவிட்சர்லாந்து வீரர் ரொஜர் ஃபெடரர் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். உலக டென்னிஸ் வீரர் மற்றும் வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ளது.

இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 2 ஆம் இடத்தில் இருந்த சுவிட்சர்லாந்து வீரர் ரொஜர் ஃபெடரர் 8,670 புள்ளிகள்களைப் பெற்று மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.

மேலும், முதலாவது இடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரஃபெல் நடால் மாட்ரிட் ஓபன் போட்டியில் கால் இறுதியில் வெளியேறியதன் காரணமாக 7,950 புள்ளிகள் பெற்று 2 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வேரேவ் 3 ஆவது இடத்திலும், சேர்பியா நாட்டை சேர்ந்த நோவாக் ஜோகோவிச் 12 ஆவது இடத்தில் இருந்து 18ஆவது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பின்னர் ஜோகோவிச் முதல் 15 இடத்துக்கு வெளியே தள்ளப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg