Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போராடி தோற்றது பார்சிலோனா அணி

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:56 GMT, May 15, 2018 | Published: 05:34 GMT, May 15, 2018 |
0 Comments
1150
This post was written by : Jeyachandran Vithushan

ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றுவரும் லாலிகா கால்பந்து போட்டித் தொடரில், பார்சிலோனா அணி 4-5 என்ற கோல் கணக்கில் லெவான்டே அணியிடம் போராடி தோல்வியடைந்துள்ளது.

பார்சிலோனா அணி குறித்த போட்டியின் சம்பியன் பட்டத்திற்கு முன்னரே தகுதி பெற்ற நிலையில் தொடர்ந்தும் வெற்றி பெறும் என எண்ணிய ரசிகர்களுக்கு நேற்று (திங்கட்கிழமை) ஏமாற்றமே கிடைத்தது.

இந்த போட்டியில் பார்சிலோனா அணி நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு ஓய்வு வழங்கப்பட்டது. இருப்பினும் ஆரம்பத்தில் இருந்தே உற்சாகமாக விளையாடி நெருக்கடி கொடுத்த லெவான்டே அணியின் வீரர் இம்மானுவேல் போட்டெங் ஹாட்ரிக் கோல் அடித்தன் மூலம் 5-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இறுதியில் கடும் போராட்டத்திற்கு மத்தியில் பார்சிலோனா அணிக்கு கோட்டின்யோ கோரியா ஹாட்ரிக் கோல் அடித்து பார்சிலோனா அணியை வலுவாக்கினார். இருப்பினும் ஆட்ட நேர முடிவில் லெவான்டே 5-4 என்ற கோல் கணக்கில் லெவான்டே அணி வெற்றி பெற்றது.

அனைத்து அணிகளும் தலா 37 லீக் ஆட்டங்களில் விளையாடி முடித்துள்ள நிலையில், 27 வெற்றி, 9 சமநிலை, 1 தோல்வியுடன் 90 புள்ளிகள் பெற்றுள்ளது பார்சிலோனா அணி. அத்லெடிகோ மாட்ரிட் (78 புள்ளி), ரியல் மாட்ரிட் (75) அடுத்த இடங்களை பிடித்துள்ளன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg