Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய அரச திருமணம்: மேகனின் தந்தை பங்கேற்கமாட்டார்!

In
Updated: 07:35 GMT, May 15, 2018 | Published: 07:35 GMT, May 15, 2018 |
0 Comments
1260
This post was written by : Risha

பிரித்தானிய இளவரசர் ஹரியை, அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் கரம்பிடிக்கவுள்ள அந்த பிரமாண்ட திருமண நிகழ்வில், மார்க்கலின் தந்தை தோமஸ் மார்க்கல் பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மார்க்கலின் தந்தையின் பங்கேற்பு குறித்து எழுந்துள்ள சர்ச்சை குறித்து கருத்து வெளியிட இளவரசர் ஹரியின் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

திருமண நிகழ்வில் மார்க்கலின் தந்தை பங்கேற்கமாட்டார் என்ற சர்ச்சை தகவலை அமெரிக்காவில் பிரபல செய்தித் தளமான TMZ வெளியிட்டுள்ளது.

பிரத்தானிய அரச குடும்பத்தினர், பிரபலங்கள் மற்றும் சர்வதேச பங்கேற்கும் பிரமாண்ட நிகழ்வொன்றில் தொமஸ் மார்க்கலும் பங்கேற்பதாக இருந்தது. பிரபலங்களுடனான இந்த சந்திப்பின்போது, புகைப்படங்களை எடுத்து ஒரு இலட்சம் அமெரிக்க டொலருக்கும் அதிகமான தொகைக்கு விற்பனை செய்ய, தோமஸ் மார்க்கல், முக்கிய நபர்கள் சம்பந்தபட்ட பொதுவிடங்களில் நிகழும் நேரடி நிகழ்வுகளை பதிவு செய்யும் செய்தி புகைப்பட வல்லுனர்களுடன் ஒப்பந்தம் செய்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இது குறித்து TMZ செய்தித் தளம் தோமஸ் மார்க்கலை சந்தித்து வினவியபோது, புகைப்பட வல்லுனர்கள் இது குறித்து தன்னை அணுகி தனக்கு பணம் வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தன் மீது அவதூறு எழுந்துள்ள சந்தர்ப்பத்தில், குறித்த திருமண நிகழ்வில் பங்கேற்று, திருமண பந்தத்தில் இணையப்போகும் ஹரி மற்றும் மேகனுக்கு சங்கடத்தை ஏற்படுத்த விருப்பமில்லாத நிலையிலேயே தோமஸ் மார்க்கல் திருமண நிகழ்வில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த விடயம் தொடர்பாக இதுவரை தமக்கு எவ்வித தகவலும் அறியக்கிடைக்கவில்லை என ஹரியின் அலுவலகத்தின் கெனிங்ஸ்டன் மாளிகை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)