Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இனப்படுகொலைக்கு விசாரணை வேண்டும்: சிவகரன்

In இலங்கை
Updated: 06:42 GMT, May 15, 2018 | Published: 06:42 GMT, May 15, 2018 |
0 Comments
1091
This post was written by : poovannan

இனப்படுகொலைக்கு ஒரு தனியான விசாரணை ஆணைக்குழுவை மாகாண சபையில் நியமித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

வட. மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அக்கடிதத்தில், “இந்நூற்றாண்டில் இடம்பெற்ற மிகப்பெரிய இனப்படுகொலை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சம்பவமாகும். அதனால் இன்றைய அவலத்தை புரிந்து கொண்டு தமிழர்களின் நம்பிக்கையை காப்பாற்றவேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுடைய கோரிக்கைக்குப் பின்னாலிருந்து சில அரசியல்வாதிகள் வழிநடத்துகிறார்கள் என்பதும் வெளிப்படையானது. அத்துடன் மாகாணசபை உறுப்பினர்களும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்.

நினைவுத் தூபி அமைப்பதற்கு ஒரு குழு அமைத்திருந்தபோதும் அது இயங்கவில்லை. முள்ளிவாய்காலில் இதுவரை காணி அடையாளமிட்டு அதற்கான ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மாகாணசபை உறுப்பினர்கள் ஒத்துழைத்திருந்தால் நினைவுத் தூபி அமைத்திருக்க முடியும்.

அத்துடன் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்களின் புள்ளிவிபரப்படி 146,679 பேர் கொல்லப்பட்டு அல்லது காணாமல்போய் உள்ளனர். இதனை ஆராய்ந்து, கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் புள்ளிவிபரங்கள் தவறானவை என்பதை நிரூபித்திருக்கலாம்.

படைத்தரப்பாலும் அரசாங்கத்தாலும் அபகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரச காணிகள் தொடர்பான விபரங்களின்படி, பௌத்த விகாரைகள், அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் மற்றும் படைத்தரப்பு முகாம்கள் போன்ற பிரச்சினைகளுக்கு முடிவெடுக்க வேண்டும்.

மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுறுவதற்கு முன்னர் மேலே குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்ற முயற்சி செய்யும்படி கேட்டுக்கொள்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)