Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேசியாவில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை

In
Updated: 06:14 GMT, May 15, 2018 | Published: 06:14 GMT, May 15, 2018 |
0 Comments
1068
This post was written by : Johnson paiva

இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபயாவின் தேவாலயங்கள் மற்றும் முக்கியமான இடங்களில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் இரண்டாவது பெரிய நகரான சுரபயாவில் நேற்று (திங்கட்கிழமை) மற்றும் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தொடர்ச்சியான தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) பலத்த பாதுகாப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுரபயாவில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் “கோழைத்தனத்தை வெளிப்பாடு” எனத் தெரிவித்துள்ள அந்நாட்டு ஜனாதிபதி பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் உருவாக்கப்படும் என்றார்.

இந்நிலையில் தற்கொலைத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட 13 பேரில் 12 பேருடைய சடலங்கள் பொலிஸாரரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் சடலங்களை அவர்களது குடும்பங்கள் அடையாளம் காட்டும் பணிகள் நடைபெறுவதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

மேலும் அந்நாட்டு மக்கள் இறந்தவர்களுக்காக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ள நிலையில் இஸ்லாமியர்கள் வாழும் மிகப்பெரிய நாட்டில் இராணுவத்தினரும் பொலிஸாருக்கு ஆதரவாக செயற்படவேண்டும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg