Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரணைதீவு விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழு கரிசனை

In இலங்கை
Updated: 13:25 GMT, May 15, 2018 | Published: 07:10 GMT, May 15, 2018 |
0 Comments
1210
This post was written by : Varshini

கிளிநொச்சி – இரணைதீவு பகுதிக்குச் சென்ற யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள், அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்துகொண்டனர்.

இரணைதீவு மக்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், யாழ். மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் கனகராஜா தலைமையிலான குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அங்கு சென்றனர்.

இதன்போது, தமது சொந்த இடத்தில் வாழ்வது தமது உரிமை என்றும் அதனை பெற்றுத்தருமாறும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு, தமது வாழ்வாதார தொழிலான மீன்பிடியை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.

கடந்த 26 வருடங்களாக பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படும் இரணைதீவை விடுவிக்குமாறு கோரி, அம்மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு வருட போராட்டத்தில் பொறுமையிழந்த மக்கள், கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இரணைதீவுக்குள் நுழைந்து அங்குள்ள தேவாலயத்தில் தங்கியிருந்து சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு தமது வாழ்வாதார தொழிலை மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றும், மீள்குடியேற்றம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் கோரி கடந்த 3ஆம் திகதி யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)