Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் முடிவை ஏற்க இங்கிலாந்து மறுப்பு

In
Updated: 07:31 GMT, May 15, 2018 | Published: 07:31 GMT, May 15, 2018 |
0 Comments
1062
This post was written by : Johnson paiva

இங்கிலாந்து அரசாங்கம் தனது தூதரகத்தை ஜெருசலேமிற்கு நகர்த்துவதற்கான எந்த திட்டமும் இல்லை என்றும் அமெரிக்காவின் முடிவை ஏற்க மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இஸ்ரேயலின் தலைநகரமாக ஜெருசலேமினை அறிவித்து இஸ்ரேயலுக்கான அமெரிக்கத் தூதரகத்தினை டெல் அவிவ்விலிருந்து ஜெருசலேம் அல்-குட்ஸிற்கு நகர்த்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா இந்த முடிவினை ஒருதலைபட்சமாக எடுத்துள்ளதென உலகநாடுகள் பல கண்டித்துள்ள நிலையில் இஸ்ரேயல் நாட்டு அரசாங்கம் மகிழ்ச்சியாகவும் பலஸ்தீன அரசாங்கம் கோபமாகவும் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் இந்த முடிவு மற்றும் தூதரக நகர்த்துதல் இங்கிலாந்து அரசினால் ஏற்கமுடியாதெனவும் இஸ்ரேயலுக்கான இங்கிலாந்து தூதரகத்தினை டெல் அவ்விவிலிருந்து ஜெருசலேமிற்கு நகர்த்துவதற்கான எந்தவிதமான திட்டமும் இல்லையென்றும் அந்நாட்டுப் பிரதமரின் ஊடகப்பேச்சாளர் நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்விற்கு பெரும்பாலான வெளிநாட்டுத் தூதுவர்கள் சமூகமளிக்கவில்லை. மேலும் தூதரகம் திறந்து வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அங்கு வன்முறை வெடித்தமையும் 55 க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)