Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹரி-மேகன் மினி திருமண கேக்: சுவைக்க விண்ட்சர் மக்களுக்கு வாய்ப்பு

In
Updated: 09:02 GMT, May 15, 2018 | Published: 09:02 GMT, May 15, 2018 |
0 Comments
1139
This post was written by : Risha

இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலின் திருமணத்தை உலகமே பல்வேறு விதமாகக் கொண்டாடி வருகின்ற நிலையில், அவர்களது திருமண கேக் வடிவை ஒத்த மாதிரி சிறிய வகையிலான மினி கேக்-களை விண்ட்சர் வெதுப்பகம் தயாரித்துள்ளது.

பத்து சென்றீமீற்றர் உயரத்திற்கு மூன்று அடுக்குகளை கொண்டதாக எலுமிச்சை மற்றும் பட்டர்கிரீம் சுவையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கேக்-கானது, உத்தியோகப்பூர்வ அரச திருமண கேக்-கின் சுவையை ஒத்ததாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஹரி- மேகன் ஆகியோரின் திருமண கேக், பல அடுக்குகளை கொண்டதாக பட்டர்கீரிம் பூசப்பட்டு, இயற்கை மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

அதனை ஒத்ததாக விண்ட்சர் வெதுப்பகம் தயாரித்துள்ள இந்த கேக்கானது மூன்று வெனிலா கேக் அடுக்குகளின் மேலே செர்ரி பழத்தை வைத்து அலங்கரிக்கப்பட்டுள்ளது.

கைகளினால் அலங்கரிக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த கேக்-கானது, 4.50 பவுண்ட் விலைக்கு இந்த வாரம் முழுவதுமாக விற்பனை செய்யப்படவுள்ளதாக, குறித்த வெதுப்பகத்தின் இணை உரிமையாளர் எட்வர்ட் டர்க்கின் தெரிவித்தார்.

ஹரி- மேகன் ஜோடி எதிர்வரும் 19ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவுள்ள நிலையில், அந்த தினத்தை கொண்டாட உலகமே காத்திருக்கிறது. இந்நிலையில், அவர்களது திருமண கேக்கை ஒத்த வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கேக்கை சுவைக்க, ஹரி- மேகன் திருமண நாளில் இலட்சக் கணக்கானோர் வருகைத் தருவர் எனவும் இது தமது வருவாயை ஊக்குவிப்பதாக அமையும் என்றும் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த கேக்கினை, முதல் முறையாக குறித்த வெதுப்பகத்திற்குவரும் வழமையான வயதான மூன்று வாடிக்கையாளர்கள், சுவைத்து மகிழ்ந்தனர்.

இந்த கேக் மிகவும் சுவையாக இருந்ததாகவும், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற மதிப்பு கொண்டதாகவும், பார்வைக்கு மிகவும் கவர்ச்சிகரமானதாகவும் உள்ளதாக, கேக்-கை சுவைத்த 71 வயதுடைய வாடிக்கையாளர் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)